இன்று சர்வதேச இளைஞர்கள் தினம்!

நமது நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சியில் மிகவும் முக்கிய பங்காற்றுபவர்கள் தான் இளைஞர்கள். இவர்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து பல சாதனைகளையும் படைத்துள்ளனர். ஒரு இளைஞன் நினைத்தால் இந்த உலகத்தையே மாற்றி காண்பிக்க முடியும்.

எனவே இப்படிப்பட்ட இளைஞர்களை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 12-ம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் 1999-ம் ஆண்டு, ஆகஸ்ட் 12-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு, ஒவ்வொரு 2000-ம் ஆண்டு முதல் சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

வேலை தேடுபவர்களாக இல்லாமல் 

வேலை வழங்குபவர்களாக 

இளைஞர்கள் உருவாக வேண்டும் 

என்ற கலாமின் கனவு விரைவில் நிறைவேற வேண்டும். இளைஞர்கள் நினைத்தால் எந்த ஒரு காரியத்தையும் மிக எளிதாக செய்து முடித்துவிட முடியும். அந்த வகையில், நமது நாட்டின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் வழிகாட்டியாக திகழும் அனைத்து இளைஞர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சாதனையின் நாள் தான், இந்த சர்வதேச இளைஞர்கள் தினம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.