யூ-டியூப் விடியோவால் வந்த வினையம்..! உயிரிழந்த 14 வயது சிறுமி!

சீனாவில் சேர்ந்த 14 வயது சிறுமியான, சேசே. இவர், யூடியூப் வீடியோவை பார்த்து நிறைய

By surya | Published: Sep 22, 2019 01:13 PM

சீனாவில் சேர்ந்த 14 வயது சிறுமியான, சேசே. இவர், யூடியூப் வீடியோவை பார்த்து நிறைய செய்து வந்தார். அந்த வகையில், காலி டின் ஒன்றில் தீ மூட்டி பாப் கார்னை எளிமையாக செய்யலாம் என்ற விடியோவை பார்த்தார். இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த சிறுமி, அதே போல் தனது வீட்டில் செய்ய முயற்சித்துள்ளார். மேலும், அதற்காக அனைத்து பொருட்களையும் தயார் செய்துள்ளார். இதற்கு ஆல்கஹால் டின் ஒன்றை அவர் பயன்படுத்தியதால், தீ பற்ற வைத்தவுடன் அந்த டின் கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்துச் சிதறியுள்ளது. Image result for யூடியூபை பார்த்து பாப் கார்ன் செய்ய முயற்சித்த சிறுமி மரணம்.! இந்நிலையில் சிறுமியின் முகம், வயிறு, கை என பல இடங்களில் தீ பரவியது. வெடி சத்தம் கேட்டதும் அங்கு வந்த அவளின் பெற்றோர், சேசேவை பார்த்து கதிரினர். படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், மருத்துவமனையில் சேசேவுக்கு 93 சதவீதம் தீ காயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை அறிந்து பாப் கார்ன் செய்யும் வீடியோவை வெளியிட்ட அந்த பெண், அவர்களிடம் மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc