அடுத்த படத்தில் சூர்யாவின் கதாப்பாத்திரம் இதுதானாம்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இதற்கிடையில், ஐயாக்குநர் ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இவர் இயக்குனர், டி.ஜெ.ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவர் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், இருளர் பழங்குடியினர் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை வைத்து மையமாக இப்படம் உருவாகி உள்ளதாகவும், இப்படத்தில் இவர் வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.