தினம் ஒரு திருப்பாவை

தினம் ஒரு திருப்பாவை

  • மார்கழி மாதத்தில் மனமுருகி படிக்க வேண்டிய பதிகம் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
  • பாவைகள் கண்டிப்பாக பாடவேண்டிய பதிகம் இன்றைய பாடல் மற்றும் பாடலின் பொருளையும் அறிந்து பாடுவோம் திருமாலின் திவ்ய பாதத்தில் சரண் புகுவோம்

திருப்பாவை

பாடல் : 9 தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழத் துயிலனைமேல் கண்வளரும் மாமகன் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்; மாமீர் அவளை யெழுப்பீரோ? உம்மகள்தான் ஊமையோ? அன்றிச் செலவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? "மாமாயன் மாதவன் வைகுந்த"  னென்றென்று நாமம் பலவும் நவின்றலோ ரெம்பாவாய். - ஸ்ரீ ஆண்டாள்- பாடல் விளக்கம்: தூய  மாணிக்கங்களை அழுத்திச் சமைத்த மாடத்திலே சுற்றிலும் விளக்குகள் எரியவும்,அகில் முதலியவற்றின் புகை மணக்கவும்,தூங்குவதற்கென்றே உள்ள படுக்கையில் மீது கண் உறங்குகின்ற அம்மான் மகளே! மாணிக்கக் கதவின் தாழ்ப்பாளைத் திற! (மாமன் மகள் இவ்வாறு அன்போடு எழுப்பியும் அவள் எழவில்லை ஆதலால் அவள் தாயை எழுப்ப வந்தவர்களின் மாமியை அழைத்து,அவளை எழுப்பும் படி  வேண்டுகின்றனர்) மாமியாரே! உங்கள் மகள் எங்களுக்கு பதில் சொல்லாதலால் ஊமையோ? அல்லது செவிடோ? உறக்கமோ? ஒழிவில்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மந்திரத்தினால் கட்டுப்பட்டு கிடக்கிறளோ? மாமாயனே,மாதவனே! வைகுந்தனே! என்று அவனுடைய திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம்; ஆயினும் அவள் எழவில்லை;அவளை எழுப்ப மாட்டீர்களோ? என்று ஆண்டாள் இயற்றி உள்ளார்.  

Latest Posts

நவராத்திரி திருவிழா : களைகட்டிய பிக் பாஸ் வீடு, உற்சாகத்தில் போட்டியாளர்கள்!
"பணம் லா பிரச்சனை இல்ல"..... மிரட்டும் சூரரைப் போற்று டிரைலர்..!
இன்று 1 முட்டை விலை எவ்வளவு தெரியுமா...?
நாளுக்கு நாள் இந்தியாவில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு!
பெரம்பலூரில் டைனோசர் முட்டை கண்டெடுக்கப்பட்டதாக பரவிய வதந்தி! இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!
வணக்கம் நல்லா இருக்கீங்களா? எப்படி வந்தது இந்த யோசனை.? தூத்துக்குடி சலுன் கடைக்காரரிடம் மோடி...
வேதனையான தோல்வி....நம் இதயத்தின் சூப்பர் கிங்ஸ் அவர்கள்...
20 ஆயிரம் கண அடியிலிருந்து 15 ஆயிரமாக சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம்!
குடிவெறியில் தாயின் தலையை துண்டித்த கொடூரன் கைது - காரணம் இது தானாம்!
மீண்டும் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா! ஸ்பெயினில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்!