ஔவையாரின் வரிகளை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி.!

  • 62வது மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் ஔவையின் வரிகளை சுட்டிக் காட்டி, அதற்கான விளக்கத்தையும் அளித்த பிரதமர் மோடி.

62வது மான் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில், ராக்கெட் ஏவுவதை காணும் வகையில், 10,000 பேர் அமரும் வகையிலான கேலரி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் இளைஞர்கள், குழந்தைகளின் அறிவியல் திறனை மேம்படுத்த உதவும் எனவும் பிரதமர் மோடி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அடுத்த மாதம் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ள உள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, 9 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திய கேரளாவைச் சேர்ந்த பாகிரதி அம்மா, 105 வயதில் 4ம் வகுப்பு தேர்வெழுதி 75% மதிப்பெண் பெற்றது அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாக பாராட்டினார்.

இதையடுத்து கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு என்ற ஔவையின் வரிகளை சுட்டிக் காட்டி, அதற்கான விளக்கத்தையும் அளித்தார். வெகு விமர்சியாக நடைபெற்று முடிந்த மகா சிவராத்திரியையும், வரவுள்ள ஹோலி பண்டிகையையும் குறிப்பிட்டு பேசிய பிரதமர், சமூக கருத்துகளை உள்ளடக்கிய ஒவ்வொரு பண்டிகையும் இந்தியாவை இணைப்பதாக பெருவிதம் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்