கண்டங்கத்தரியின் சக்தி வாய்ந்த குண நலன்கள் !!!!!!!!!!!!

கண்டங்கத்தரி பொதுவாக அனைத்து இடங்களிலும்  கிடைக்கும்  ஒரு அற்புதசக்தி வாய்ந்த மூலிகை ஆகும். கண்டங்கத்தரி என்றால்  கண்டம் என்றால்  கழுத்து அதாவது கழுத்தில் இருக்கும் அனைத்து விதமான நோய்களையம் தீர்த்து வைக்கும் மூலிகையாகும். கப நோய்களை குணப்படுத்தும் மூலிகையாகும் .இதன் இலை  பூ, காய் ,வேர் அனைத்தும் மருத்துவ குணமுடையது .

தைராய்டு நோயை குணப்படுத்தும் தன்மை உடையது. ஒரு கைப்பிடி அளவு கண்டங்கத்தரி இலையை  எடுத்து அதை இடித்து வைத்து கொள்ளவும். மேலும் 21 மிளகு எடுத்து அதையும் இடித்து ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் இடித்தஇலை மற்றும் மிளகைப் போட்டு 1 லிட்டர்  தண்ணீர் ஊற்றி அதை நன்கு கொதிக்க வைத்து கால் லிட்டர் ராக  வரும் வரை கொதிக்க வைத்து ஆறிய  பின்பு இதை  ஒரு டம்ளர் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் தைராய்டு பிரச்சனை தீரும் .இவ்வாறு பத்து நாள்கள் குடிக்க வேண்டும்.

கண்டங்கத்தரி இலையை சாறு இடித்து அத்துடன் தேங்காய் எண்ணெய்  சேர்த்து காய்ச்சி உடலில் பூசி வர வியர்வை நாற்றம் இருக்காது .கண்டங்கத்தரி இலையை சாறு  இடித்து அத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தலையில் பூசி வர தலை வலி குணமாகும் .அத்துடன் கீழ்வாதம் குணமாகும்.

Image result for கண்டங்கத்தரி இலை

கண்டங்கத்தரி இலையை சாறு இடித்து அத்துடன் ஆலிவ் விதை எண்ணெய் சேர்த்து சம அளவு எடுத்து காய்ச்சி காலில்  வெடிப்பு இருக்கும் இடத்தில் போட வேண்டும் . அவ்வாறு செய்தல் காலில் உள்ள  வெடிப்பு மிக விரைவில் குணமாகும்.

Leave a Comment