15 மாவட்டங்களுக்கு மிக கனமழை! 55KM-ல் சூறாவளி- வா.,மையம் தகவல்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து கூறியுள்ளதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பாக, திருவள்ளூர், வேலூர்,  ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர், புதுக்கோட்டை

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் மற்ற மாவட்டங்களில்  இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற உள்ளதால் அக்.,19 ந்தேதி மத்திய கிழக்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

அக்.,20,21 ஆகிய தேதிகளில்  சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள்  கடலுக்கு செல்லவேண்டாம் என்று தெரிவித்துள்ளது .

author avatar
kavitha