குண்டுவெடிப்பு பயத்தை போக தந்தை செய்த காரியம்.. கண்களை கலங்கவைக்கும் வீடியோ..!

  • சிரியா நாட்டில் போர் நடைபெற்று வருவதால், அங்கு வெடிகுண்டுகளை வீசி

By Fahad | Published: Apr 10 2020 03:33 AM

  • சிரியா நாட்டில் போர் நடைபெற்று வருவதால், அங்கு வெடிகுண்டுகளை வீசி வருகின்றனர்.
  • குண்டு  வெடிப்பு சத்தத்தை கேட்ட மகளின் பயத்தை போக்க ஒரு வித்தியாசாமான செயலை செய்தார். அவரின் அந்த செயல், காண்போரின் மனதை உலுக்கியது.
சிரியா நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர், தற்பொழுது உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில், இட்லிப் எனும் மாநிலத்தில் ஆங்காங்கே வெடிகுண்டுகளை வீசி வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவரின் 4 வயது மகள், குண்டு வெடிக்கும் சத்தத்தை கேட்டு பயந்துள்ளார். இதனை கண்ட அவரின் தந்தை, மகளின் பயத்தை போக்க ஒரு புதிய வழியை கூறினார். https://twitter.com/alganmehmett/status/1229150231704543236 அதாவது, குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதும் சிரிக்க வேண்டும் என கூறினார். அதைஎபோலாவே, ஒவ்வொரு வாட்டியும் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கும்போதெல்லாம் அந்த குழந்தை சிரிக்கும். மனதை உளுவைக்கும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி காண்போரின் கண்களை கலங்க வைத்தது.

Related Posts