கள்ளக்காதலனுடன் திருமணம் செய்ய குழந்தையை கடலில் வீசிய கொடூர தாய்.!

பிரணவ், சரண்யா தம்பதிக்கு ஒன்றரை வயதில் வியான் என்ற  ஆண் குழந்தை உள்ளது.

By murugan | Published: Feb 21, 2020 09:29 AM

  • பிரணவ், சரண்யா தம்பதிக்கு ஒன்றரை வயதில் வியான் என்ற  ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்து உள்ளனர்.
  •  சரண்யா கள்ளக்காதலனை திருமணம் செய்ய குழந்தை இடையூறாக இருந்ததால் குழந்தையை கடலில் வீசினார். 
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சார்ந்தவர் பிரணவ்(29) இவரது மனைவி சரண்யா (22) இவர்களுக்கு ஒன்றரை வயதில் வியான் என்ற  ஆண் குழந்தை உள்ளது. இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாள்களுக்கு முன் பிரணவிற்கு , சரண்யா போன் செய்து தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் தனது தாய் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். பின்னர் இரவு பிரணவ் மனைவி தாய் வீட்டிலேயே தங்கி உள்ளார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது தனது மகன் வியான் காணவில்லை என சரண்யா கூறியதையடுத்து அனைவரும் குழந்தையை தேடியுள்ளனர்.இதுதொடர்பாக கண்ணூர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். பின்னர் கடந்த  18-ம் தேதி வீட்டின் அருகே உள்ள கடற்கரை பாறையில் வியான் சடலமாக கிடந்தார். இதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சரண்யா வியானை கொன்றது தெரியவந்தது. விசாரணையில் ஃபேஸ்புக் மூலமாக ஒரு வாலிபருடன் ,சரண்யா விற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை திருமணம் செய்து கொள்ள குழந்தை இடையூறாக இருந்ததால் குழந்தையை கொல்ல முடிவு செய்தேன். கொலை பழியை கணவர் மீது போடவே அவரை தனது வீட்டிற்கு  அழைத்ததாக சரண்யா கூறினார். இதையடுத்து போலீசார் சரண்யாவை  கைது செய்தனர்.
Step2: Place in ads Display sections

unicc