மும்பை இந்தியன்ஸ்க்கு சப்போட்டாக களமிறங்கும் டாடா நெக்ஸான் லிக்யூடு சில்வர்…!

மும்பை அணியினர் பயன்படுத்தும் சின்னம் மற்றும் சீருடை வண்ணங்களின் அடிப்படையில், டாடா நெக்ஸான் லிக்யூடு சில்வர் என்ற வண்ணக் காரில் இந்த அழகு கூட்டும் பணிகளை மிக நேர்த்தியாக செய்து பார்ப்போரை மெர்சலாக்கி இருக்கின்றனர்.

முன்புறத்தில் பனி விளக்குகள் அறைக்கு கீழேயும், ஏர்டேம் கீழே பம்பரிலும் மஞ்சள் வண்ண ஸ்டிக்கர் அலங்காரம் கொடுத்துள்ளனர். பானட்டில் கருப்பு வண்ண கோடுகள் ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோன்று, க்ரில் அமைப்பில் இரண்டு வரிசையில் மட்டும் வெள்ளை வண்ணம் தீட்டி இருக்கின்றனர். வெளிப்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு ரியர் வியூ மிரர்கள் கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணம் தீட்டப்பட்டு தனித்துவம் பெற்றிருக்கின்றன.

முன்புற வீல் ஆர்ச்சில்ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் சின்னம் ஒட்டப்பட்டு இருக்கிறது. அலாய் சக்கரங்களில் மஞ்சள் வண்ணம் கொடுக்கப்பட்டு இருப்பதும் கவர்ச்சியை அதிகரிப்பதாக இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஐபிஎல் நிறுவனத்தின் முக்கிய ஸ்பான்சர்களில் ஒரு பிராண்டாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த சூழலில், இதுபோன்ற கூடுதல் கவர்ச்சிகரமான அலங்கார விஷயங்கள், ஐபிஎல் ரசிகர்களாக உள்ள வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும். இந்த அலங்கார பணிகள் டீலர் அளவிலேயே செய்து தரப்படுகிறது. நிறுவனத்தின் சார்பில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment