கொரோனா இருப்பதாக சந்தேகித்து பயணத்தின் போது இறந்த பெண் தூக்கி வீசப்பட்டதாக புகார்!

பயணத்தின் போது உயிரிழந்த பெண்ணுக்குகொரோனா இருப்பதாக சந்தேகித்து வெளியில் தூக்கி எறிந்த பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி யுபி ரோட்வேஸ் எனும் பெயரில் நொய்டாவில் இருந்து ஷிகாக்காபாத்திற்கு சென்று கொண்டிருந்த பேருந்தில், டெல்லியில் பட்பர்கஞ்சில் பாதுகாப்பு காவலராக பணிபுரியும் சுசில்குமார் மகள் அனுஷ்காவும் அவரது மனைவியும் பயணம் செய்து கொண்டுள்ளனர்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக அனுஷ்கா திடீர் மரணமடைந்துள்ளார். உடனடியாக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பேருந்திலிருந்து அனைவருக்கும் இவளுக்கு கொரோனா உள்ளதால் தான் இறந்துவிட்டால் என்ற அச்சத்தை தூண்டி, அவளை ஒரு போர்வையில் போர்த்தியவாறு தூக்கி எறிந்துள்ளனர். அதன்பின் மருத்துவமனைக்கு சென்று உடற்கூறு ஆய்வு செய்தபோது அவர் மாரடைப்பு காரணமாக தான் இறந்தார் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது எப்ஐஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர் அப்பெண்ணின் குடும்பத்தினர். அப்போது பேருந்து உரிமையாளர்கள் நாங்கள் தூக்கி எரிந்ததற்கான எந்த ஒரு அடையாளமும் உங்களிடம் இல்லை. நாங்கள் நடு வழியில் இறக்கி விட்டோம் என்று கூறியுள்ளனர். ஆனால் அவரது மரணம் இயற்கை மரணம் தான் ககொரானா வைரஸ் கிடையாது என்பதை நிரூபித்தது மட்டுமல்லாமல் இவர்கள் பேருந்தில் செய்த அத்தனையையும் சுட்டிக்காட்டி புகார் எழுப்பியுள்ளனர் இறந்த அனுஷ்காவின் குடும்பத்தினர்.

author avatar
Rebekal