சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக அன்பு நியமனம்..!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை

By murugan | Published: Dec 03, 2019 04:22 PM

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தது. சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வந்த ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக பணி நீட்டிப்பு செய்வதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக  நியமித்தது செல்லும் என்றும் அதற்கான அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உண்டு எனவும் கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் கூறி இருந்தது. இதையடுத்து தமிழக அரசு மேலும் ஒரு புதிய மனுவை இரண்டு வாரங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அதில் உச்சநீதிமன்றத்தில் சிலை தொடர்பான வழக்குகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசுக்கு எதிராக பொன்மானிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். அதனால் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் மேலும் விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் , தொழில்சார்ந்த அதிகாரிடம் கொடுக்க வேண்டுமெனவும் கூறியிருந்தது. அந்த வழக்கை டிசம்பர் 2-ம் தேதி  ஒத்தி வைத்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு சார்பில் வாதிட்ட  வழக்கறிஞர்  , பொன் மாணிக்கவேல் பதவி காலம் கடந்த மாதம் 30-ம் தேதியோடு முடிவடைந்து விட்டது .ஆவணங்களை கேட்டால் எங்களுக்கு  எதிராகவே அவமதிப்பு வழக்கு தொடர்கிறார். எனவே இனியும் பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக தொடரக் கூடாது நாங்க வேற அதிகாரியை நியமித்து கொள்கிறோம் என கூறினார். இதற்கு பொன்மானிக்கவேல் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பொன்மானிக்கவேல் இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மற்றும் விசாரணை அறிக்கை ஆகியவற்றை துறை உயர் அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். தமிழக அரசுக்கு எதிராக பொன்மணிக்கவேல் தொடரப்பட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. பொன் மாணிக்கவேல் பணி நீட்டிப்பு உத்தரவுகள்  நாங்கள் பிறப்பிக்க முடியாது அதனை சென்னை உயர்நீதிமன்றம் எடுத்துக் கொள்ளலாம்  பொன்மானிக்கவேல் பதவி நீட்டிப்பு வழங்க கூடாது என தமிழக அரசு தொடர்ந்த மனு அனைத்து எதிர்மனு தாரர்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில்  புதிய ஐ.ஜியாக காவல் துறையின் நிர்வாக ஐ.ஜியாக அன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொன்மானிக்கவேல் கீழ் செயல்பட்டு வந்த அனைத்து அதிகாரிகளும் ஐ.ஜி அன்பு கீழ்  செயல்பட உள்ளன.
Step2: Place in ads Display sections

unicc