8 தமிழர்களை சுட்டுக்கொன்ற மரண தண்டனை விதிக்கப்பட்ட மனித மிருகத்தை விடுதலை செய்ய உத்தரவிட்ட இலங்கை அதிபர்…

நம் அண்டை நாடான இலங்கையில் தனி ஈழம் கேட்டு உள்நாட்டு போர் புரிந்த விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 1983-ம் ஆண்டு தொடங்கி 2009-ம் ஆண்டு வரை உள்நாட்டுப்போர் நடந்தது. இந்த போரின்போது, 2000-ம் ஆண்டு, டிசம்பர் மாதம்  19ஆம்  தேதி யாழ்ப்பாணம் மிருசுவில்,  ஞானபாலன் ரவீந்திரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பார்த்திபன், சின்னையா வில்வராஜா, நடேசு ஜெயச்சந்திரன், கதிரன் ஞான சந்திரன், ஞானசந்திரன் சாந்தன், வில்வராஜா பிரசாத் ஆகியோரை ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவ வீரர் சுனில் ரத்நாயகா என்பன்  கொடூரமாக துடிதுடிக்க சுட்டுக்கொலை செய்தான். இது தொடர்பாக சுனில் ரத்நாயகா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட நிலையில், அவனுக்கு  மரண தண்டனை விதித்து 2015-ம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை இலங்கை உச்சநீதிமன்றமும்  கடந்த ஆண்டு உறுதி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், சுனில் ரத்நாயகாவை விடுதலை செய்யுமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். அதிபர் கோத்தபய ராஜபக்சே பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்தது குறித்து அந்த நாட்டின் நீதித்துறை மந்திரி நிமல் சிறிபாலா டி சில்வாவிடம் கருத்து தெரிவித்த  அவர், இலங்கையில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது. எதையும் ரத்து செய்யும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது. மன்னிப்பு அளிக்கிற அதிகாரமும் அவருக்கு உள்ளது. இதை யாரும் கேள்வி கேட்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Kaliraj