செப்.27 முதல் முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

செப்.27 முதல் முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவிற்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு அரசு தடை விதித்தது. அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதும், போக்குவரத்து சேவைகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் சிக்கிக் கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ஒரு சில சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்தது. அந்த ரயில்கள் மூலமாக, கொரோனா பரவும் வாய்ப்பு அதிகமாக இருந்ததையடுத்து அதற்கும் அரசு தடை விதித்தது.

இதையடுத்து, கடந்த 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்களையும் கடந்த 1ம் தேதி முதல் பேருந்து சேவைகளையும் இயக்க அனுமதி அளித்தது. அதனால், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவிற்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செப்.27 முதல் சென்னை - திருவனந்தபுரம், சென்னை - மங்களூரு, சென்னை - மைசூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் விரைவு ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் ! அதிமுக அரசுடன் இணைத்து போராட தயார் - மு.க.ஸ்டாலின்
மஹாராஷ்டிராவில் பள்ளத்தாக்கில் விழுந்த பஸ் - 5பேர் பலி, 34 பேர் படுகாயம்!
அமேசான் வைத்த ஆப்பு?தமிழ் ராக்கர்ஸ் நிரந்தர முடக்கம்?
பிக்பாஸ் மூலம் மஹாபாரதம் பேசி குறிப்பிட்ட மதத்தினரின் வாக்கை பெற வேடம் போடுகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்
புரட்டாசி மாதத்திலும் முட்டை விலை 5 ரூபாய்க்கு மேல் விற்பனை.!
முடியலைன்னா போய் சேருங்க, வெளில வாடா - சனம் ஷெட்டி சுரேஷ் இடையே கடும் மோதல்!
தீபவாளிக்கு ரீலிசாகும் அட்லியின் படம்!
நற்செய்தி...வேலையில்லா பட்டதாரிகளுக்காக கடனுதவி திட்டம்.!
எருமையில் சவாரி செய்து பிரச்சாரம் செய்த வேட்பாளர் கைது.!
அபராதம் எல்லாம் கிடையாது, உடனடியாக கைது தான் - சிங்கப்பூரில் அதிரடி!