புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் சிறப்பு விடுமுறை அறிவிப்பு !

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  அரசு ஊழியர்கள் புற்று நோய்க்கு ஹீமோ தெரபி மற்றும்

By murugan | Published: Jul 31, 2019 08:45 AM

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  அரசு ஊழியர்கள் புற்று நோய்க்கு ஹீமோ தெரபி மற்றும் ரேடியோ தெரபி சிகிச்சை பெற ஊதியத்துடன் கூடிய பத்து நாள்கள் விடுமுறை  வழங்கப்படும் என பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார்  சமீபத்தில் நடந்த மானிய கோரிக்கை என்று தெரிவித்தார். இந்நிலையில் இந்த விடுப்பு வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழக அரசு ஆணையின்படி அரசு ஊழியர்கள் ஒவ்வொரு முறையும் புற்று நோய் தொடர்பாக சிகிச்சை பெற போகும் போது ஊதியத்துடன் கூடிய பத்து நாள்கள் விடுமுறை  வழங்கப்படும். ஹீமோ தெரபி சிகிச்சை பெற ஒரு நாளும் , ரேடியோ தெரபி சிகிச்சை பெற ஒரு நாளும்   சிகிச்சையில் இருந்து மீண்டு வர எட்டு நாட்களும் ஆக  மொத்தம்  பத்து நாள்கள் சிறப்பு விடுமுறை வழங்கப்படும். இந்த விடுமுறை பெற சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் அல்லது  பொறுப்பு அலுவலரிடம்  மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
Step2: Place in ads Display sections

unicc