ரோஹித் மூலம் 80 வருடத்திற்கு பிறகு சாதனை படைத்த தென் ஆப்பிரிக்கா அணி..!

தென்னாபிரிக்கா , இந்தியா இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்திய வீரர் ரோஹித் சர்மா முதல் இன்னிங்ஸில் 176 , இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்கள் விளாசினார்.
இந்நிலையில் ரோஹித் சர்மா இந்த  இரண்டு இன்னிங்சிலும் ஸ்டம்பிட்  ஆகியுள்ளார். இதன் மூலம்  டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் ஸ்டம்பிட் ஆன முதல் இந்திய வீரர் ரோஹித். மேலும் 1939 -ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் வாலி ஹம்மண்ட்  இரண்டு இன்னிங்சிலும்  ஸ்டம்பிட் ஆனார்.அதன் பின்னர் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் ஸ்டம்பிட் ஆன வீரர் ரோஹித்.
ரோஹித் சர்மா இரண்டு இன்னிங்சிலும் மகாராஜ் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் டி காக் ஸ்டம்பிட் செய்தது குறிப்பிடதக்கது.

author avatar
murugan