மகாத்மா காந்தியின் சில குறிப்புகள் ..!

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இவர் அக்டோபர் 02 ஆம் தேதி 1869 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தார்.இது இவருக்கு 150 -வது பிறந்தநாள் ஆகும் .இவரது பெற்றோர் ரம்சாந்த் காந்தி- புத்திலிபாய் ஆவார்கள் .இவரது தாய் மொழி குஜராத்தி ஆகும் .
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் சில குறிப்புகள் :
இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் அறவழி போராட்டம் நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்தியா விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என்று நாட்டு மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம்.
 

Leave a Comment