ராணுவ வீரர் திடீர் துப்பாக்கி சூடு.! 25 பேர் உயிரிழப்பு, 35க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!

ராணுவ வீரர் திடீர் துப்பாக்கி சூடு.! 25 பேர் உயிரிழப்பு, 35க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!

  • தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே டெர்மினல் 21 வணிக வளாகத்தில் ராணுவ அதிகாரி ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 35-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே கோரத் என்ற பகுதியில்  சார்ஜெண்ட் மேஜர் ஜக்கரபந்த் தொம்மா என்ற ராணுவ அதிகாரி நேற்று( சனிக்கிழமை) அங்கிருந்த ராணுவக் கவச வாகனத்தைக் கடத்த முயன்றுள்ளர். அப்போது அவரைத் தடுக்க முயன்ற ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினார். பின்னர் அங்கிருந்து ராணுவ ஆயுதங்கள் வைத்திருந்த இடத்திற்குச் சென்ற தொம்மா ஏராளமான ஆயுதங்களை எடுத்துக்கொண்டு அதே வாகனத்தில் டெர்மினல் 21 என்ற வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். இதனிடையே முன்னதாக அவர் அங்கிருந்த புத்த விகாரத்திலும் துப்பாக்கியோடு சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்நிலையில், டெர்மினல் 21 வணிக வளாகம் சென்ற அவர், காரை விட்டு இறங்கியதும் கண்மூடித்தனமாக அங்கு உள்ளவர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளினார். இதுகுறித்து தகவலறிந்த வந்த காவல்துறையினர் மீதும் தொம்மா துப்பாக்கியால் சுட்டார். பின்னர் பொதுமக்களில் ஏராளமானோரைப் பிணைக் கைதியாகப் பிடித்துக் கொண்டு வணிக வளாகத்தில் பதுங்கிக் கொண்டார் என்றும், பின்னர் வணிக வளாகத்தில் காயம் அடைந்தவர்களை மீட்கவும், தாக்குதல் நடத்தியவரைப் பிடிக்கவும் ராணுவ அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். ஆனால் அவரை பிடிக்கமுடியவில்லை என்றும் தப்பி ஓடிவிட்டார் என்றும் தவகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மறைந்திருந்த ராணுவ அதிகாரி தொம்மா நடத்திய திடீர் தாக்குதலில் கமாண்டோ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் அங்கிருந்த 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 35-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ராணுவ வீரரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Latest Posts

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் கொடுத்தவர் இலங்கை நபர்..?
#IPL2020: கொல்கத்தாவை வீழ்த்தி 2-ம் இடத்திற்கு சென்ற பெங்களூர்..!
#IPL2020: மிரட்டலாக பந்து வீசிய பெங்களூர்.. 84 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா.!
சிம்பு நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா.?
"பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்க யாரும் நேரில் வர வேண்டாம்" - கே.எஸ்.அழகிரி!
இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 1.16  லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு - அமெரிக்க ஆய்வு
கமல்நாத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி - மைசூரு சிறப்பு ரயில் இயக்கம்.!
ஆந்திராவில் 27 மாணவர்களுக்கு கொரோனா.. 4 பள்ளிகள் 10 நாட்களுக்கு மூடல்.!
மத்திய வங்கியில் கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பத்தை வேளாண் கூட்டுறவு வங்கியில் பெறலாம்.!