அதிகரிக்கும் தங்கம் கடத்தும் விவகாரம்… சென்னை விமான நிலையத்தில் சிக்கியது ஒரு கிலோ தங்கம்…

  • சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்.
  • சுங்க இலாக துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.

சென்னை அண்ணா பன்னாட்டு விமான முனையத்தில்  பிரான்சில் இருந்து ஒமென் வழியாக சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற முகமது ஹாரூன் மரைக்கார் சென்னை வந்தார். அப்போது  அவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் அவரது உடைகளை சோதனை செய்தனர். அதில் அவர், ஆடைக்குள் 1 தங்க சங்கிலி, 2 தங்க கட்டிகள், 70 தங்க காசுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையின் மூலம் அவரிடம் இருந்து ரூ.37 லட்சம் மதிப்புள்ள 990 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்படு குறிப்பிடத்தக்கது.

Image result for gold smuggling amblifire in chennai airport

இதேபோல் தாய்லாந்தில் இருந்து வந்த சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அமந்தீப் சிங்(26) என்பவரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில்,, அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், அவர் வைத்திருந்த ஆடியோ பிளையரை சந்தேகத்தின்பேரில்  பிரித்து பார்த்தபோது அதில் வெள்ளி முலாம் பூசப்பட்ட 32 தகடுகள் இருந்தன. அவற்றை சோதனை செய்தபோது அவை அனைத்தும் தங்க தகடுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் அவரிடம் இருந்து ரூ.10 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள 259 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் 2 பேரிடம்இந்த கடத்தல் தொடர்பாக  சுங்க இலாகா அதிகாரிகள், முகமது ஹாரூன் மரைக்காரை கைது செய்தனர். அமந்தீப் சிங்கிடம் விசாரித்து வருகின்றனர்.

author avatar
Kaliraj