பொள்ளாச்சி சம்பவம் எதிரொலி :துப்பாக்கி வைத்து கொள்ள உரிமம் கேட்டு மனு அளித்த அக்கா ,தங்கை !!!!

  • பெண்கள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத்து கொள்ள உரிமம் வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் தாங்கள் மிகுந்த அச்சமடைந்து  இருப்பதாகவும் கூறினார்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

இதில் முக்கிய குற்றவாளிகளாக  4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.

இந்நிலையில் கோவை நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த சாந்தகுமார். சாந்தகுமாருக்கு  இரு மகள்கள் உள்ளனர். இவரது முதல் மகள் தமிழ் ஈழம் இவர்  சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் பயின்று வருகிறார்.

மற்றொரு மகள் ஓவியா துடியலூர் பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து  வருகிறார். இவர்கள் இருவரும் பெண்கள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத்து கொள்ள உரிமம் வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மனு அளித்தனர்.

அந்த மனுவில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் தாங்கள் மிகுந்த அச்சமடைந்து  இருப்பதாகவும் தங்களது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருக்க அனுமதி தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
author avatar
murugan

Leave a Comment