நீதி கிடைக்க அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்- ஷிகர் தவான்

தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்

By bala | Published: Jun 26, 2020 04:21 PM

தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ட்வீட் செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், பொது மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில், இவர்கள் இருவரையும் துன்புறுத்திய காவல்துறையினருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது ட்வீட்டர் பக்கத்தில் "தமிழ்நாட்டில் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் நடந்த கொடூரத்தைப் பற்றி கேட்டுஅதிர்ச்சியடைந்தேன். இதற்காக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்,அவருடைய குடும்பத்திற்கு நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். என்று பதிவு செய்துள்ளார். மேலும்  ட்வீட்டரில் #JusticeForJeyarajAndFenix என்ற ஹாஸ்டெக் இந்திய அளவு ட்ரெண்டிங்கில் 2வது இடத்தில் உள்ளது.

 
Step2: Place in ads Display sections

unicc