திருப்பூரில் மக்கள் கிருமிநாசினி சுரங்கத்துக்குள் நுழைந்த பின்னரே சந்தையில் பொருட்கள் வாங்க அனுமதி!

சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, இந்திய அரசு 21வரும்  நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில்,திருப்பூரில் காலையில், சந்தைக்கு வருபவர்கள் கிருமி நாசினி சுரங்க பாதைக்குள் சென்ற பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறுகையில், ‘காலையில், சந்தைக்கு வருபவர்கள் கிருமி நாசினி சுரங்க பாதைக்குள், 3 முதல் 5 நொடிகள் இருந்து, கை கழுவிய பின்னரே சந்தைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும், திருப்பூரில் கொரோனாவை எதிர்த்து போராடும் மக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.’ என்று தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.