தனது 50 வது பயணமாக விண்ணில் பாயப்போகிறது பிஎஸ்எல்வி…!!! எதிர்பார்ப்பில் இந்திய மக்கள்…!!!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து  பி.எஸ்.எல்.வி., வகையில், 50வது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி- சி48 என்ற ராக்கெட்டை, நாளை அதாவது டிசம்பர் 11 அன்று இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல்,தகவல் தொடர்பு  உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் உதவியுடன், செயற்கை கோள்களை விண்ணில் நிலை நிறுத்துகிறது. தற்போது,இந்திய  எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்க்கொள்வதற்க்காக, 628 கிலோ எடை கொண்ட  ‘ரிசாட் – 2 பி.ஆர்.,1’ என்ற, அதிநவீன செயற்கை கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

Image result for pslv

இது முதல் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., – சி48ராக்கெட், நாளை மதியம், 3:25 மணிக்கு விண்ணில் பாய்கிறது.இதில், ‘ரிசாட் -2 பி.ஆர்., 1’ செயற்கைகோளுடன், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் ஆகிய ஒவ்வொரு நாடுகளின்,ஒரு செயற்கைகோளும் ஐக்கிய  அமெரிக்காவின் ஆறு செயற்கை கோள்களும், வணிக ரீதியில்  விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளன.இந்த் பயணம் பிஎஸ்எல்வி யின் ஐம்பதாவது பயணம் ஆகும்.

author avatar
Kaliraj