கொரோனாவுக்கு நிதி வழங்காதவர்களின் சம்பளத்தில் கைவைக்கும் தயாரிப்பாளர்கள்!

சீனாவில் தொடங்கி தற்போது இத்தாலி, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை சீரழித்துக் கொண்டு அங்குள்ள உயிர்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டிருக்க கூடிய கொடுமையான வைரஸ் கிருமி தான் கொரோனா. இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் இதற்காக பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது சம்பளத்திலிருந்து முடிந்த உதவியை கொடுத்து வந்தனர். உதாரணமாக ரஜினி 50 லட்சம், சூர்யா 10 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம், விஜய் சேதுபதி 10 லட்சம் என பலர் தங்களால் முடிந்ததை கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், இவர்களை தவிர சில நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர்கள் இதைவிட அதிக அளவு சம்பளத்தை பெற்று இருந்தாலும் அவர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுக்கவில்லை. எனவே தற்பொழுது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இந்த நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர்களின் சம்பளத்தில் கை வைக்க முடிவு செய்துள்ளனர்.

அதாவது நயன்தாரா கோடியில் சம்பளம் பெற்று இருந்தாலும் இதுவரை நிவாரண நிதிக்காக ஐந்து பைசா கூட கொடுக்கவில்லை. அதேபோல் ஏ.ஆர்.ரகுமான், இமான்  இசை அமைப்பாளர்களும் கொடுக்கவில்லை. இயக்குனர் அட்லீ, சங்கர் ஆகிய யாருமே கொடுக்கவில்லை.எனவே இந்த இயக்குனர்களின் சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் வரை குறைத்து வழங்க தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.

author avatar
Rebekal