தடை முடிந்து மீண்டும் பிருத்வி ஷா..!மும்பை அணியில் இடம் கிடைக்குமா..!

சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடுவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் பிருத்வி

By murugan | Published: Nov 09, 2019 12:13 PM

சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடுவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் பிருத்வி ஷாவிற்கு ஊக்கமருந்து  சோதனை நடத்தப்பட்டது.தடை விதிக்கப்பட்ட ஊக்கமூட்டும் இருமல் மாத்திரை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் பிருத்வி ஷாவிற்கு மார்ச் மாதம் 16-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் பிருத்வி ஷாவிற்கான தடை வருகின்ற 15-ம் தேதி உடன் முடிவடைவதால் தற்போது நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணியில் இடம்பெறுவர் என கூறப்படுகிறது. பிருத்வி ஷாவை அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளது.அவர் உடல் தகுதி உடன் உள்ளார். ஆனால் எதையும் உறுதியாக சொல்லமுடியாது என மும்பை அணியின் தேர்வு குழு தலைவர் மிலிந்த் ரேகே கூறியுள்ளார். சையது முஷ்டாக் அலி தொடர் நேற்று முதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc