ஐபோனுக்கு போட்டியாக களமிறங்கும் ஒன்ப்ளஸ் 6..!

 

ஒன்ப்ளஸ் நிறுவனம்,ஹை-எண்ட் அம்சங்களை பட்ஜெட் விலையில் வழங்கி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களின் மீதான மோகத்தை குறைத்தது.

ஒன்ப்ளஸ் 5 மற்றும் 5டி-க்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து மிக விரைவில், இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் அடுத்த மாதம் மே 18-ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இம்மாத தொடக்கத்தில், ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் அதிகாரபூர்வ அம்சங்கள் வெளியாகின. அதன் பின்னர் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போனின் சேமிப்பு மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒன்ப்ளஸ் 6-ன் ஒரு தோராயமான விலை நிர்ணயமும் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட்போன் மிகவும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்டு இயங்குகிறது என்பது உறுதி செய்யப்பட்டது. உடன் ஒன்ப்ளஸ் 6-ன் மூன்று சேமிப்பு மடல்கள் (இரண்டு மாடல்கள் வெளியாவது மிக உறுதி, மூன்றாவது மாடல் சற்று சந்தேகதிற்கு உரியது) சார்ந்த விவரங்கள் வெளியாகின.

6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் வெளியான தகவலின்படி, ஒன்ப்ளஸ் 6 ஆனது 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் உடனான 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடல்களில் வெளியாகும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ அடிப்படையிலான ஆக்ஸிஜென்ஸ் 5.1 கொண்டு இயங்கும். இதில் 256ஜிபி மாடல் சற்று சந்தேகத்திற்கு உரிய மாடலாக உள்ளது. இருப்பினும் அறிமுகமாகும் மற்ற இரண்டு மாடல்களும் இந்திய சந்தையை எட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

டிஸ்பிளே ஒரு 6.2 இன்ச் புல் எச்டி ப்ளஸ் (2160×1080 பிக்ஸல்கள்; 19: 9 என்கிற அளவிலான திரை விகிதம்) டிஸ்பிளே கொண்டிருக்கும். அதாவது சமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபோன் எக்ஸ் போன்ற டிஸ்பிளேவை கொண்டிருக்கும். பின்புறத்தில், ஒரு கைரேகை சென்சார் உடனான எப்1.7 துளை கொண்ட 16எம்பி + 20எம்பி என்கிற டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 20எம்பி செல்பீ கேமராவும் அதில் பேஸ் அன்லாக் அம்சமும் கொண்டுள்ளது. 3450 எம்ஏஎச் பேட்டரி வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும்.

ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒரு 3450 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும். இதன் டாஷ் சார்ஜ் திறன் ஆனது 30 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் நிகழ்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்ப்ளஸ் 6-ன் இதர அம்சங்கள் பற்றிய விவரங்கள் ஏதுமில்லை. ஆப்பிள் ஐபோன் எக்ஸ் சரியும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இதன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஆகிய இரு சேமிப்பு மாடல்களும் முறையே ரூ.34,000/-க்கும் மற்றும் ரூ.39,999/-க்கும் அறிமுகமாகலாம். ஒருவேளை 256 ஜிபி மாடல் வெளியானால் அது சுமார் ரூ.45,500/- என்கிற விலையில் இருக்கும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment