25-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு.. ! குழந்தையை கடத்திய இளம்பெண் கைது.!

Over 25 CCTV footage review ..! Teenager arrested for abducting child

  • கடந்த 12-ம் தேதி அடையாளம் தெரியாத 23 வயது மதிப்புத்தக்க பெண் ஒருவர் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி மஹாராஷ்டிரா தம்பதி குழந்தையை கடத்தி சென்றார்.
  • இன்று கடத்திய பெண் ,குழந்தையுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வந்தபோது அப்பெண்ணை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
மஹாராஷ்டிராவை சார்ந்த ஜானே போஸ்லே -ரந்தோஷ் தம்பதிக்கு ஜான் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது.இவர்கள் மெரினா மணற்பரப்பில் தாங்கி பலூன் விற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 12-ம் தேதி அடையாளம் தெரியாத 23 வயது மதிப்புத்தக்க பெண் ஒருவர் இவர்களின் குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி இந்த தம்பதியை அப்பெண் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளார். குழந்தைக்கு ஆடை மாற்ற வேண்டும் எனக் கூறி தம்பதிகளை ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டு அந்த இளம் பெண் குழந்தையை கடத்திக் கொண்டு சென்றுள்ளார். பின்னர்  ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்த காவல் நிலையத்தில் அந்த தம்பதி புகார் கொடுத்தனர். இதை தொடர்ந்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த பெண் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர பூக்கடை காவல் துறை 5 தனிப்படைகள் அமைத்து பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். அந்த பெண்  சொல்லும் வழி முழுவதும் 25-க்கும்  மேற்பட்ட சிசிடிவி ஆய்வு செய்தனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வரை அப்பெண் செல்லலும் சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தது.அந்த சிசிடிவி காட்சிகள் மருத்துவமனைக்கு செல்லும் காட்சிகளும் கிடைத்ததை வைத்து போலீசார்  மருத்துவமனையில் அங்கே காத்திருந்தனர். இந்நிலையில்  இன்று கடத்திய பெண் ,குழந்தையுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வந்தபோது அப்பெண்ணை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடமிருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். குழந்தையை கடத்திய பெண் யார் என்ற விவரங்களை காவல்துறை பின்னர் தெரிவிப்பதாக கூறினார்கள்.  

Related News