அமேசானில் துவங்கிய ஆன்லைன் உணவு விநியோகம்!

அமேசான் நிறுவனம் தனது ஆன்லைன் உணவு விநியோக சேவையை இன்று முதல் துவங்குகிறது. 

உலகம் முழுவதும் கொரோனா தனது கோர முகத்தை கொடூரமாக காண்பித்து வருகிறது. இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், இந்திய முழுவதும் இந்த வைரஸ் தனது தாக்கத்தை அதிகளவில் காட்டி கொண்டு தான்  உள்ளது. இந்நிலையில், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இந்திய முழுவதும் ஊரங்கில் இருந்து வருகிறது. மக்களின் நலன் கருதி சில தளர்வுகளையும் அரசு அறிவித்து வருகிறது. 

இந்நிலையில், தற்பொழுது ஆன்லைன் சேவையில் முதலிடத்தில் இருக்கும் அமேசான் ஏற்கனவே தனது பொருள்கள் சேவையை தொடங்கிவிட்ட நிலையில், தற்பொழுது உணவு விநியோகத்தையும் துவங்கியுள்ளது. உணவு விநியோகத்தில் முன்னிடத்தில் இருந்த சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி தங்களது சேவையை குறைந்துள்ள நிலையில் அமேசான் கல் பாதித்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 

author avatar
Rebekal