அரசுப் பள்ளியில் ஒருநாள் தலைமையாசிரியராக மாணவி..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முக்கட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் , இதர மாணவர்கள் படித்து வருகின்றனர்.
நேற்று குழந்தைகள் தினம் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த பள்ளியில் படிக்கும்  தர்ஷினி என்ற மாணவியை  ஒருநாள் தலைமையாசிரியராக அறிவிக்கப்பட்டார்.
தலைமையாசிரியராக  அறிவிக்கப்பட்ட மாணவியை அனைத்து ஆசிரியர்களும் ஓன்று சேர்ந்து தலைமையாசிரியர் இருக்கையில் அமரவைத்தனர்.பின்னர் மாணவி முன் அமர்ந்து இருந்த ஆசிரியர்கள் தங்களது பணிகள் மற்றும் பள்ளியில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து கூறினர்.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்ட தலைமை ஆசிரியராக இருந்த மாணவி விரைவில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என கூறினார்.

author avatar
murugan