ஒரு விக்கெட் கூட எடுக்காமல் பட்டியலில் இடம் பிடித்த நுவான் பிரதீப்!

நேற்றைய போட்டியில் இலங்கையும், ஆஸ்திரேலியாவும் மோதியது. இந்தப் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் இறங்கிய  ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் குவித்தனர்.பின்னர் இறங்கிய இலங்கை அணி 45.5 ஓவரில் 247 ரன்கள் மட்டுமே  எடுத்து 87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில் இதுவரை நடந்த உலகக்கோப்பையில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் அதிக ரன்கள் கொடுத்த பந்து வீச்சாளர் பட்டியலில்  இலங்கை அணியை சார்ந்த நுவான் பிரதீப் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
நேற்றைய போட்டியில் நுவான் பிரதீப் 10 ஓவர் வீசி ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் 88 ரன்கள் கொடுத்தார்.நேற்றைய போட்டியில்  இலங்கை அணியில் அதிக ரன்கள் கொடுத்ததும் இவரே மேலும் பட்டியலில் உள்ள அனைத்து வீரர்களும்  உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் போது மட்டுமே ஒரு விக்கெட் கூட எடுக்காமல் அதிக ரன்கள் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0/92 – Rudi van Vuuren (NAM) v AUS, 2003
0/88 – Nuwan Pradeep (SL) v AUS, 2019
0/87 – Javagal Srinath (IND) v AUS, 2003

author avatar
murugan