நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் - எதற்காக கொண்டாடுகிறோம் ?

ஆண்டு தோறும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இதற்கு

By venu | Published: Nov 12, 2019 08:03 PM

ஆண்டு தோறும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இதற்கு காரணமானவர் குறித்து நாம் பார்ப்போம் .1889 ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தவர்  பண்டித ஜவகர்லால் நேரு. இவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார்.நேருவின் பிறந்த நாள் தினமான நவம்பர் 14-ஆம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ‘ரோஜாவின் ராஜா’ என்று அறியப்பட்ட நேரு குழந்தைகளிடம் அதிக பாசம் கொண்டவர் ஆவார்.குறிப்பாக பள்ளிகளில் காணப்படும் படங்களில் சட்டைப்பையில் ஒரு ரோஜாவுடன் சிரித்த முகத்துடன் காணப்படுவார் நேரு.மேலும் அவருக்கு  நேரு மாமா என்ற செல்லப்பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc