தமிழகத்தில் வரப்போகும் அடுத்தடுத்து அதிரடிகள்! வாகன ஓட்டிகள் உஷார்!!!

தமிழகத்தில் ஏற்கனவே இருசக்கர வாகனத்தில் பயணம்செய்யும்போது ஓட்டுபவர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என சட்டம் போடபட்டுள்ளது.
அதனால்தான் 2016இல் மோட்டார் வாகன விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை  நாலாயிரமாக இருந்து 2017இல் 2900ஆக குறைந்துள்ளது. ஆதலால் இதனை இன்னும் குறைக்க சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுபல வழக்கை தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி தமிழக அரசு வக்கீலிடம் கேள்வி கேட்டார். இது குறித்து தமிழக அரசு வக்கீல்,  கூறுகையில் இனி இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவருக்கும் ஹெல்மட் அவசியம் என வலியுருத்தி அதனை மீறுவோருக்கு தண்டணை வழங்கபடும் என கூறினார். மேலும் ஹெல்மட் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.
மேலும் கார்களில் செல்லும் அனைவரும் சீட்பெல்ட் கட்டாயம் போட வேண்டும் என வலியுருத்துவோம் எனவும் அரசு வக்கீல் குறிபிட்டார்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment