இந்தியாவில் ஒரே நாளில் 64,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு..861பேர் உயிரிழப்பு.!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 64,399 பெருக்கு கொரோனா உறுதி.

இந்தியாவில் கொரோனா வைரஸ்  தொற்று 21.53 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் 6,28,747 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினற்னர். இதுவரை 14,80,885 பேர் கொரோனா தொற்றிலிருந்து குண்டமடைந்து வீடு திரும்பினர். தற்போது வரை 43,379 இறப்புகள் பதிவாகியுள்ளது என்று சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கினறனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60,000 க்கும் அதிகமாக அதிகரித்து வருவது இது தொடர்ந்து மூன்றாவது நாளாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 64,399 பெருக்கு கொரோனா, 861 பேர் கொரோனாவால் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றுநோயை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 7,19,364 மாதிரிகள் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8 வரை சோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகள் 2,41,06,535 எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார துறை தெரிவித்துள்ளது.

மொத்தம் 4,90,262 கொரோனா தொற்றுகளுடன் மகாராஷ்டிரா இந்தியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.