தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் ..!தமிழக உரிமைகளை டெல்லிக்கு தாரைவார்த்து வீட்டீர்கள்..!சுளீர் விளாசல்

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் கொடுத்த மனுவில் இடம்பெற்றுள்ள 29 கோரிக்கைகள் “புதிய மொந்தையில் பழையகள்” அடைக்கப்பட்டுள்ளதைத்தான் நினைவூட்டுகிறது என்று விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் கூட்டத்தில் தமிழக மக்கள்,சட்டமன்றத்தின் உணர்வுகளை முறைப்படியும், முனைப்புடனும் முதலமைச்சர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை, நீட் தேர்வு,மேகதாது அணை மற்றும் மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ள மாநில நிதி அத்தனைக்கும் தீர்வு காண வாய்ப்பு கிடைத்தும் அதனை கோட்டை விட்டுள்ளார்
தமிகத்தில் மக்கள் தவிக்கும் வாய்க்கு தண்ணீர் இன்றி தவித்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் டெல்லி சென்ற முதல்வரோ தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து விட்டு வந்துள்ளார் என்று குற்றம் சாட்டி உள்ளார்

author avatar
kavitha