தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

  •  மத்திய பா.ஜ.க. அரசின் கட்டளைக்குப் பணிந்து அதிமுக அரசின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பாரபட்சமாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் அதிமுக அரசிடமே முழுமையாக ஒப்படைத்து விட்டு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுங்கிக் கொண்டு விட்டதோ என்ற பலத்த சந்தேகம் தேர்தலை சந்திக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.

பல மாதங்கள் காலியாக இருக்கும் இடைத் தேர்தலை நடத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ள தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலுடன் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தலை அறிவிக்காதது முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அமைந்து விட்டது.

வழக்கமாக மூன்று வருடங்களுக்கு மேல் பணியாற்றும் மாவட்ட ஆட்சி தலைவர்கள், மற்றும் தேர்தல் அதிகாரிகள் பலர் அதே பதவியில் தொடருகிறார்கள். எதிர்கட்சிகள் மீது மட்டுமே தேர்தல் விதிமுறை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

author avatar
Srimahath

Leave a Comment