மேட்டூர் அணை கடந்த 2 மாதங்களில் 3-வது முறையாக 120 அடியை எட்டியது..!

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக  நீர்பிடிப்பு பகுதிகளில்

By murugan | Published: Oct 23, 2019 11:17 AM

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக  நீர்பிடிப்பு பகுதிகளில் நீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இது கடந்த 2 மாதங்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கடந்த 86 ஆண்டுகளில் மேட்டூர் அணை 44-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணை நிரம்பியதால் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படும். இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும் வெளியேறும் பகுதியில் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும்  கூறப்பட்டு உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc