படிகாரத்தில் உள்ள நீங்கள் இதுவரை அறிந்திராத மருத்துவ குணங்கள்

படிகாரம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனை பலரும் பல விதமான காரியங்களுக்கு

By leena | Published: Apr 09, 2019 08:40 AM

படிகாரம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனை பலரும் பல விதமான காரியங்களுக்கு உபயோகிப்பதுண்டு. ஆனால், இந்த படிகாரத்தில் நமது உடலில் நோய்களை குணப்படுத்தக் கூடிய மருத்துவக் குணங்களும் உள்ளது. மேலும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் படிகாரம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தற்போது இந்த பதிவில் படிகாரட்டி உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

தொண்டைப்புண்

Related image படிகாரம் தொண்டை புண்ணை ஆற்றுவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தொண்டைப்புண் பிரச்னை உள்ளவர்கள், மாதுளம் பூ, மாதுளம் பட்டை சிறிது நீரில் இட்டு, கொதிக்க வைத்து, அத்துடன் படிகாரத்தூள் சிறிது சேர்த்து இருவேளை வாய் கொப்புளித்துவர, தண்ணீர் கூட விழுங்க முடியாமல் வேதனை தரும் தொண்டைப் புண் பாதிப்பு மாறிவிடும்.

கண்பார்வை பிரச்சனைகள்

Related image கண் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்ப்பதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது இந்த படிகாரம். படிகாரத்தூளை முட்டையின் வெண் கருவில் கலந்து, அதை ஒரு மெல்லிய துணியில் நனைத்து, கண்களின் மேல் வைத்து கட்டிவர, கண் வலி உடனே குணமாகிவிடும்.

இரத்தக்கட்டு

Image result for இரத்தக்கட்டுநமது உடலில் ஏதாவது இடத்தில அடிபட்டு இரத்த கட்டு ஏற்பட்டால், அதனை குணமாக்குவதில் படிகாரம் முக்கியப்பங்கினை வகிக்கிறது. படிகாரத்தூள் மற்றும் செம்மண் இவற்றை முட்டையின் வெள்ளைக்கருவுடன் கலந்து நன்கு அரைத்து, இரத்தக்கட்டு ஏற்பட்ட இடத்தில், பற்று போட்டால் ஏற்கத்தக்க கட்டு உடனடியாக கரைந்து விடும்.

இருமல்

Image result for இருமல் படிகாரத்தில் இருமலை குணமாக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. படிக்காரத்தூளை சிறிதளவு தேனில் கலந்து நன்றாக குழைத்து, தினமும் இருவேளை என்று தொடர்ந்து சில நாட்கள் வரை சாப்பிட்டு வர இருமல் பிரச்சனை சரியாகும்.

வாய்ப்புண்

Image result for வாய்ப்புண் குடலில் புண் இருந்தால், வாய்ப்புண் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாய்ப்புண்ணை குணமாக்குவதில் படிகாரம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. கடுக்காய்த் தூளை, படிகாரத்தூளில் கலந்து, அவற்றை, வெதுவெதுப்பான நீரில் இட்டு நன்கு கலக்கி, அந்த நீரில் வாயைக் கொப்புளித்துவர, வாய்ப்புண் பாதிப்புகள் விலகிவிடும்.
Step2: Place in ads Display sections

unicc