உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி ! வெண்கல பதக்கம் வென்றார் மேரி கோம்

உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதி போட்டியில் தோல்வி

By Fahad | Published: Mar 30 2020 05:20 AM

உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக வெண்கல பதக்கம் வென்றுள்ளார் மேரி கோம் . உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் இந்திய வீராங்கனை மேரி கோம் 51 கி எடை பிரிவின் காலிறுதி போட்டியில் கொலம்பியாவின் விக்டோரியா வேலன்சியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றார்.இதன் மூலம் உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிக்கு போட்டிக்கு முன்னேறினார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் துருக்கி வீராங்கனை புசேனேஸ்வுடன் இந்திய வீராங்கனை மேரிகோம் மோதினார்.ஆனால்  அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக வெண்கல பதக்கம் வென்றுள்ளார் மேரி கோம் .இதுவரை நடைபெற்ற உலக குத்துச்சண்டை தொடர்களில்  6 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 8 பதக்கம்வென்று மேரிகோம் சாதனை படைத்துள்ளார்.

More News From Busenaz Cakiroglu