கர்ப்பகாலத்தில் ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்க இத பாலோ பண்ணுங்க

நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பகுதி கர்ப்பகாலம். இந்தகாலத்தில் பெண்களாகிய நாம் மிகவும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதற்கான காரணங்கள் நமக்கு என்ன என்பது தெரியுமா. இந்த காலகட்டத்தில் தான் நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் நாம் மனஅழுத்தத்துடன் இருந்தால் பிறக்கும் குழந்தைகள் உடல்நலகுறைகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது.

கர்ப்பகாலத்தில் எதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது:

கர்ப்பகாலத்தில் சோதனைகள் முடிவுகளை பெற காத்திருக்கும் போது மன அழுத்தம் ஏற்படலாம். கர்ப்பகாலத்தில் நமது உடல் மற்றும் சிந்தனை மாற்றங்களினால் கர்ப்ப மாற்றங்கள் இன்னும் இறுக்கமாக இருக்கும்.

குடும்பம், நண்பர்கள் மற்றும் மற்றவர்களிடமிருந்து பல தகவல் ஆலோசனை மற்றும் கதைகளை கேட்டு கர்ப்பகாலம் மிகவும் அபாயகரமானது என்பது பற்றிய சிந்தனைகள்  நம்முடைய மனதில் எழுவதாலும் கர்ப்பகாலத்தில் மனஅழுத்தம் அதிகம் ஏற்படலாம் .

பிற நிகழ்வுகளும் சூழ்நிலைகளும் உணர்ச்சி ரீதியான எழுச்சியை ஏற்படுத்தும் மற்றும் கர்ப்பத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

பொருளாதார சிக்கல் ,உறவு பிரச்சினைகள் மற்றும் அல்லது இடைவெளி ஆகியவைகளும் கர்ப்பகாலத்தில் மன அழுத்தை  ஏற்படுத்தலாம்.

ஒரு குடும்ப உறுப்பினரின் குடும்ப வியாதி அல்லது மரணம் கர்ப்பகாலத்தில் மன அழுத்தை ஏற்படுத்தலாம். குடும்ப வன்முறை,ஆல்கஹால் மற்றும் பிற மருந்துகளுடன் பிரச்சனைகள்
மன நோய், கவலை இந்த விஷயங்கள் பல அதே நேரத்தில் நடக்கிறது என்றால் உங்கள் மன அழுத்த நிலைகள் அதிகமாக இருக்கும்.

கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்தை குறைக்க உதவும்  சில குறிப்புகள்:

உடல்நலம் :

 

நடைபயிற்சி போன்ற சில உடல் நல பயிற்சிகள் செய்யுங்கள்.இதில் மன அழுத்தத்தை குறைப்பதற்கான, ஒட்டுமொத்த சுகாதார நலன்கள் உள்ளது.

யோகா, தியானம் ஆகியவற்றை மேற்கொண்டாலும் மனஅழுத்ததில் இருந்து தப்பிக்கலாம்.

பிடித்த பொழுது போக்கு:

 

கர்ப்பகாலத்தில் உங்களுக்கு  பிடித்தபொழுது போக்கு நிகழ்ச்சிகள் பார்ப்பது மனஅழுத்தம் நீக்கி உடல்நலம் சிறக்கும். ஓவியம் வரைதல் அல்லது புத்தங்கள் வாசிக்கலாம். குழந்தைகள் சம்பந்தமான புத்தகங்கள் வசிப்பது மனதிற்கு மிகவும் நன்மை அளிக்கும்.

குடும்பம் மற்றும் நண்பர்கள்:

 

நீங்கள் நன்றாக உணரக்கூடியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். நம்  மனதில் உள்ள கஷ்டங்களை நமக்கு நெருங்கிய நண்பர்களிடமோ அல்லது நெருங்கிய உறவுகளிடமோ சொல்வதால் அவர்களின்  ஆதரவு உங்களின் மன அழுத்தத்தை போக்க உதவலாம்.

மருத்துவர்களிடம் ஆலோசனை :

 

உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள் நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பற்றியும்,மன அழுத்ததை குறைக்க என்ன செய்ய முடியும் என்பதற்கான ஆலோசனைகளையும் கேட்கவும்.

வாழ்கை துணையுடன் நேரத்தை செலவிடுதல்:

கர்ப்பகாலத்தில் தான் உங்களுக்கும் உங்கள் வாழ்கை துணைக்கும் இடையே உள்ள அன்பு அதிகரிக்கும். எனவே உங்களின் மனஅழுத்தை போக்க அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.

பிடித்த இடங்களுக்கு செல்வது:

 

கர்ப்பகாலத்தில் வீட்டில் இருப்பதை  காட்டிலும் வெளியில் நமக்கு பிடித்த இடங்களுக்கு சென்று வருவது மிகவும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். இவ்வாறு வெளி இடங்களுக்கு சென்று வருவதால் நமது மனஅழுத்தம் ஏற்படாது.

குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது:

 

குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதாலும்  நமது மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. குழந்தைக்குடன் பேசி சிரித்து விளையாடுவதாலும் நமது மனதில் உள்ள  கஷ்டங்கள் குறைய வாய்ப்புள்ளது.

 

Leave a Comment