இஸ்ரோல் நாட்டின் பீர் பாட்டிலில் மகாத்மா காந்தி புகைப்படம்!

இஸ்ரோல் நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஓன்று இவர்களுக்கு சொந்தமான மதுபான நிறுவனத்தை இயக்கி வருகின்றனர்.இந்த நிறுவனத்தில் தயாரிக்கும் “விஸ்கி ” மதுபாட்டிலில் மகாத்மா காந்தி புகைப்படம் பொறிக்கப்பட்டு உள்ளது.

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.இதனால் பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.இந்நிலையில் இந்த விவகாரத்தை ஆம் . ஆத்மீக எம் .பி சஞ்சய் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் எழுப்பினார்.

இந்நிலையில் பாஜக ,காங்கிராஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் அந்த மதுபான பாட்டிலில் இருந்து காந்தியின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.மேலும் இந்த செயல் காந்தியை அவமதிப்பது போன்றது என குற்றம் சாட்டினார்.

இதனை தொடர்ந்து வெங்கய்ய நாயுடு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேட்டு கொண்டார்.மேலும் சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் இயங்கி வரும் மதுபான நிறுவனம் தயாரித்த பீர் பாட்டிலில் காந்தியின் புகைப்படம் இருந்தது.

பின்னர் இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த பாட்டிலில் இருந்து காந்தியின் புகைப்படத்தை அந்த நிறுவனம் நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan