கொலுபொம்மை விற்பனை அமோகம் …!ஆர்வம்காட்டும் மக்கள் ..!

புதுக்கோட்டையில்  கொலுபொம்மைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை அமோகமாக தொடங்கியுள்ளது.
அக்டோபர் 9-ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கவுள்ள நிலையில், புதுக்கோட்டையில் விதவிதமான கொலுபொம்மைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை அமோகமாக தொடங்கியுள்ளது. இதில் தசாவதார செட், ஜோதிலிங்கம் செட், கல்யாண செட், கிரிகெட் செட் என்று பல விதமான கொலு பொம்மைகளும் இடம்பெற்றுள்ளது. இவற்றை ஆர்வமாக பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். கொலு பொம்மைகள் 50 ரூபாய் தொடங்கி இரண்டாயிரம் ரூபாய் வரை கொலுபொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment