ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து நீக்கம் – காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு.!

ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து நீக்கம் – காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு.!

Default Image

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்த நிலையில், அவரை நீக்கிவிட்டதாக காங்கிரஸ் அதிரடியாக அறிவித்துள்ளது. சட்ட விரோத நடவடிக்கைக்காக ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா நீக்கப்பட்டதற்கு  சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். 

இதனிடையே மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த ஜோதிராதித்யா சிந்தியா பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்துள்ளார். முதலமைச்சர் கமல்நாத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜகவில் சிந்தியா இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Join our channel google news Youtube