நீதிபதி தஹில் ரமானி சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த தாஹில் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி நீதிபதி பணிநியமன குழுவான கொலிஜியம் பரிந்துரை செய்து இருந்தது. இதனை தொடர்ந்து நீதிபதி தாஹில் ரமாணி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

அவர் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக வரவேண்டும் என வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், மேகாலயா நீதிமன்றத்திற்கு தஹில் ரமாணி மாற்றப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் கற்பகம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளர்.

இது குறித்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள், ‘ இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை ஏன் நாடவில்லை என கேள்வி எழுப்பினர். மேலும் நீதிபதிகளின் இடமாற்றம் ஒப்புதல் பெற்று, மறுபட்டியலிடப்பட்ட பிறகு இந்த வழக்கு விசாரிக்கப்படும்.’ என தெரிவித்துள்ளனர்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.