அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தடியடி.....!!!

ஜல்லிக்கட்டு போட்டியானது எதிர்பார்த்தப்படி துவங்கி காளைகள் சீறிபாய்ந்து

By kavitha | Published: Jan 15, 2020 09:32 AM

  • ஜல்லிக்கட்டு போட்டியானது எதிர்பார்த்தப்படி துவங்கி காளைகள் சீறிபாய்ந்து வருகிறது.
  • அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டின் உரிமையாளர்கள் மீது இலேசான தடியடி நடத்தப்பட்டுள்ளது
தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் இன்றும் நாளை பாலமேட்டிலும் வருகின்ற 17ந்தேதி உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் களைக்கட்டுகிறது.இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் சரியாக காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது. இதற்காக அவனியாபுரம் -திருமங்கலம் சாலையில் வாடிவாசல் ஆனது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டியினை கண்டுகளிக்கும் விதமாகவும் பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு நடைபெற்று வருகிறது.வாடிவாசலில்  சீறிப்பாய  700 காளைகள் திமிளை காட்டிவாறு நிற்கின்றன இந்த காளைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அவற்றிற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டில் பங்கேற்க திண்டுக்கல், தேனி, கம்பம் மற்றும் திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளில் இருந்து வருகின்ற  காளைகள் அனைத்தும் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்ட பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் அவர்களின் தலைமையிலான குழுவானது இன்று காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி வைத்தனர். சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு போட்டி வீறுவிருப்பாக நடைபெற்று கொண்டிருக்க ஜல்லிக்கட்டு மாடுகளை அனுப்பும் டோக்ககன்களின்  குளறுபடியால்   மாட்டின் உரிமையாளர்களுக்குள் சலசலப்பு ஏற்படவே இதனைக் கட்டுப்படுத்த போலீசார் அவர்களின் மீது லேசான தடியடி நடத்தினர். இதன் பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்த நிலையில் சீறிப்பாயும் காளைகலை அடக்கும் இளங்காளைக்களுக்கு  அண்டா மற்றும் குக்கர் என்று  விதவிதமான வகைகளில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகொன்றன.
Step2: Place in ads Display sections

unicc