சீறிப்பாய கோவில் காளைகளுக்கு அவனியாபுர ஜல்லிக்கட்டில் அனுமதி மறுப்பு..!!!

பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு வெகுச்சிறப்பாக நடக்கும் அதன் படி பாலமேடு,அவனியாபுரம்,அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் படு சூப்பராக இருக்கும்.இதில் முறுக்கி கொண்டு சீறிப்பாயும் காளைகளை அடக்க பாயும் இளங்காளைகளையும் காண மக்கள் திரண்டு கண்டு ரசிப்பர் மேலும் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.ஆனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கோவில் காளைகளுக்கு  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எப்போழுதும் கோவில் காளைகளுக்கு வாடிவாசலில் முதல் மரியாதை செய்வது தான் வழக்கம்.

ஆனால் இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கோவில் காளைகளுக்கு முதல் மரியாதை செய்யக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டை அடுத்து அவனியாபுரம் மந்தையம்மன் கோவிலில் அவனியாபுரம் நாட்டாமை காளைக்கு சிறப்பு பூஜை போடப்பட்டது. இது குறித்து தெரிவிக்கையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவானது தங்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக அவனியாபுர பகுதி மக்கள்  வருத்ததுடன் தெரிவித்தனர்.

இந்த வருத்ததிற்கு காரணம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவானது கிராம பாரம்பரிய முறைப்படி அயன்பாப்பாகுடி அய்யனார் கோவிலில் மாடுகளுக்கு முதல் மரியாதை செய்யப்பட்ட பின்னரே அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுகள் எல்லாம் அவிழ்த்து விடப்பட்டு போட்டி துவங்குவது வழக்கமாக இருந்தது.

ஆனால் இந்த வருடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு உத்தரவை பிறப்பித்தது.மேலும் நியமனம் செய்யப்பட்ட ஆணைக்குழுவானது எந்த ஒரு காளைகளுக்கும் முதல் மரியாதை என்பது கிடையாது. என்று கூறியதை அடுத்து ஊர் மக்கள் அனைவரும் அவனியாபுரம் அருகே உள்ள பாப்பாக்குடி அய்யனார் கோயிலில் வைத்து தான் கோயில் மாடுகளுக்கு எல்லாம் முதல் மரியாதை செய்ய காவல்துறை அனுமதி மறுத்து விடவே அவர்கள் அவனியாபுரம் மந்தையம்மன் கோவிலில்  நாட்டாண்மை காளைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின் அங்கிருந்து கோவிலைச் சுற்றி அழைத்துச் சென்று போட்டியில் கலந்து கொண்டது.

இது குறித்து வேதனை தெரிவித்த அவனியாபுரம் நாட்டாண்மை சங்கர் நீதி மன்றத்தின் கடுமையான கட்டுப்பாடுகளால் வழக்கமாக அவிழ்த்து விடப்படுகின்ற கோவில் காளைக்கு அனுமதி மறுக்கப்பட்டது மிக வேதனையை தருவதாக கவலை தெரிவித்தார்.

author avatar
kavitha

Leave a Comment