இந்தியர்களின் வாட்சப்களை குறிவைக்கும் இஸ்ரேல்…!

ஸ்பை வேர்களை வைத்து, கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுவரும் NSO குரூப், தற்பொழுது இந்தியா உட்பட பல உலக நாடுகளை சேர்ந்தவர்களின் வாட்ஸ் அப்பை உளவு பார்த்து வந்ததாக சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் வழக்கு பதிவிட்டது. இதில் இந்தியா உட்பட, பல உலக நாடுகளை சேர்ந்தவர்களின் ஸ்மார்ட்போன்களில் இவர்கள் உளவிட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
யார் யாரெல்லாம் உளவு பார்க்கப் பட்டார்கள் எத்தனை பேர் போன்ற விவரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இந்த ஸ்பைவேரை மிஸ்டு கால் மூலம் தனிநபரின் ஸ்மார்ட்போனில் பரபரபடுவதாக கூறப்படுகிறது.
இந்த வைரஸ் மூலம் ஒரு தனி நபரின் போன் மூலம் அவருக்கு தெரியாமலேயே அவரின் தொலைபேசியில் உள்ள கடவுச்சொல், கண்டாக், வீடியோ, புகைப்படம், மெசேஜஸ் போன்ற அனைத்து விவரங்களையும் அணுகி விட முடியும். மேலும் அவருக்கே தெரியாமல் அவரது மொபைலில் கேமரா ஆன் செய்து அவர் என்ன செய்கிறார் என்பதையும் இத்தகைய ஸ்பைவேர் மூலம் நம்மால் கணிக்க இயலும்.