இந்தியாவில் நிபா வைரஸ் பரவுகிறதா? WHO எச்சரிக்கை விடுத்துள்ளது உண்மைதானா?

நிபா வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை விடுத்துள்ளதாக இணையத்தில் பரவும் வதந்தியான செய்திகள்.

இன்று அதிகமானோர் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பல உண்மை செய்திகளை அறிந்து கொண்டாலும், பல வதந்தியான செய்திகளும் பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில், மக்களை அச்சுறுத்தும் வகையில் இணையத்தில் வதந்தியான செய்தி பரவி வருகிறது.

அதன்படி, உலக சுகாதார நிறுவனம் (WHO) இப்போது இந்தியாவில் நிபா வைரஸ் வெடிப்பதாக எச்சரித்துள்ளது. இது கொரோனா வைரஸை விட ஆபத்தானது. இந்த வைரல் செய்தியை சமீபத்தில் பல பேஸ்புக் பயனர்கள் வெளியிட்டுள்ளனர். அதனுடன் “தி நியூயார்க் டைம்ஸ்” எழுதிய “நிபா வைரஸ், அரிய மற்றும் ஆபத்தான வைரஸ், இந்தியாவில் பரவுகிறது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையின் இணைப்பைப் பகிர்ந்துள்ளனர்.

இதனை ஆராய்ந்த AFWA, இந்த செய்தி  வதந்தியானது என கண்டறிந்துள்ளது. இந்தியாவில் நிபா வைரஸ் வெடித்ததற்கான கடைசி WHO எச்சரிக்கை ஆகஸ்ட் 2018 இல் வெளியிடப்பட்டிருந்ததும், அதனுடன் இணைத்து பகிரப்பட்ட “தி நியூயார்க் டைம்ஸ்” இன் கட்டுரை ஜூன் 4, 2018 அன்று வெளியிடப்பட்டது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்தியாவில் நிபா வைரஸ் வெடித்தது குறித்து WHO இப்போது எச்சரித்துள்ளது என்ற வைரஸ் செய்தி தவறானது என்றும், இது இரண்டு ஆண்டு பழமையான எச்சரிக்கை மற்றும் உலக சுகாதார அமைப்பிலிருந்து புதிய எச்சரிக்கை எதுவும் வரவில்லை என்றும் தெரியவந்துள்ளது

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.