இன்று கோலாகல தொடக்கத்துடன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து..!!

கொல்கத்தா:

ஐரோப்பா கண்டத்தில் நடத்தப்படும் கால்பந்து லீக்கை போன்று, இந்தியாவிலும் ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) என்ற பெயரில் கால்பந்து தொடர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல், ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,ஐ.எஸ்.எல்.  தொடரின் 5-வது சீசன் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் சனியன்று(செப்.29) தொடங்குகிறது. 10 நகரங்களில் நடைபெறும் இந்த தொடரில், சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டி கொல்கத்தா,கேரளா பிளாஸ்டர்ஸ், பெங்களூரு எப்.சி., கோவா எப்.சி.,புனே சிட்டி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.,மும்பை சிட்டி எப்.சி., தில்லி டைனமொஸ், நார்த்ஈஸ்ட் யுனை டெட் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.Image result for விளையாட்டு இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து : நாளை தொடக்கம்..!ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பின்னர் நடைபெறும் முதல் லீக்  ஆட்டத்தில், கொல்கத்தா- கேரளா
அணிகள் மோதுகின்றன. கொல் கத்தாவில் நடைபெறும் இந்த ஆட்டம் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.

Image result for விளையாட்டு இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து : நாளை தொடக்கம்..!ஐ.எஸ்.எல். வரலாற்றில் கொல்கத்தா (2014,2016), சென்னை (2015, 2017) அணிகள் மட்டுமே மாறி மாறி கோப்பையை கைப்பற்றி வருவதால், இந்த இரண்டு அணிகளுக்கும் நடப்பு சீசனில் பாடம் புகட்ட மற்ற 8 அணிகள் தீவிர பயிற்சியுடன் களமிறங்குகின்றன.இதனால் இந்த தொடர் தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெறும் என்பதில் சந்தேக மில்லை.

DINASUVADU

author avatar
Dinasuvadu desk

Leave a Comment