வந்தே பாரத் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான புதிய டெண்டர் அறிவிப்பு..! 

44 வந்தே பாரத் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான புதிய டெண்டர்களை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கான மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிப்பதற்காக 44 வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான புதிய டெண்டர்களை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இதற்கிடையில்,  சில தொழில்நுட்ப சிக்கல்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மூன்றாவது டெண்டர் கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது.  இந்த ரயில்களுக்கான இந்த டெண்டர் நான்காவது முறையாகும்.  நவம்பர் 17 ஆம் தேதி டெண்டர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏலத்திற்கு முந்தைய கூட்டம் செப்டம்பர் 29 அன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வே அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, ஐ.சி.எஃப் / சென்னை, ஆர்.சி.எஃப் / கபுர்தலா மற்றும் எம்.சி.எஃப் / ரெய்பரேலி ஆகிய இடங்களில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.