இன்று இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் மோதல்..! தொடரை கைப்பற்றப்போவது யார் ..!

நடந்து முடிந்த 2 டி20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது

By murugan | Published: Dec 11, 2019 12:25 PM

  • நடந்து முடிந்த 2 டி20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
  • இதனால்  1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.முதலில் டி20 போட்டியில் விளையாடி வருகின்றனர். நடந்து முடிந்த 2 டி20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்திய அணியில் பேட்டிங் , பவுலிங்கை  விட பில்டிங்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இரண்டாவது போட்டியில் இந்திய வீரர்கள் கேட்சை தவறவிட்டதால் தான் இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோற்க முக்கிய காரணம். இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 2 போட்டிகளிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவே இப்போட்டி அவரது சொந்த மண்ணில் நடைபெறுவதால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அணியில் தொடக்க வீரர் லெண்டில் சிம்மன்ஸ் , எவின் லீவிஸ் மற்றும் ஹெட்மெயர் அதிரடியாக விளையாடி வருவது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பக்கபலமாக உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc